செவ்வாய், 20 நவம்பர், 2012

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை விவாகரத்துச் செய்யலாமா?


கேள்வி:

எனக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்குப் பின்தான் மனைவியின் உடல் நிலை சரியில்லை என்பதுடன் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. சிறுவயது முதல் நோய் இருந்து வந்ததை மனைவி மூலம் தெரிய முடிந்தது. நான் பயணம் போகும் போதெல்லாம் மனைவியின் உடல்நிலை சரியாக இருப்பதில்லை. மனைவிக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்க, என்றாவது நலம் பெற்றுவிடுவார் என்று இவ்வளவு காலம் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வய்ப்பில்லை என்பதை இந்தப்பயணத்திலும் தெரிந்துக் கொண்டேன். டாக்டர்களின் வைத்தியத்தால் எந்த பயனுமில்லை. மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வாய்க்கு வந்தபடி பேசுவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரிக்காமல் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக இல்வாழ்க்கையும் அமைதியாக இல்லை. இந்நிலையில் என் மனைவியை விட்டு பிரிந்துகொள்ள வாய்ப்பு உண்டா?

பதில்

மேற்கண்ட நிலவரப்படி,
கரம் பிடித்த மனைவியினால் இது போன்ற மன உளைச்சல்கள் ஒரு கணவனுக்கு ஏற்படுகிற பட்சத்தில், தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாத சூழ்நிலையில், ஒரு கணவன் மாற்று யோசனை செய்து கொள்வதால் தவறில்லை. அல்லாஹ் அந்த பெண்ணுக்கு நிவாரணம் தந்து மாற்று துணையை தர போதுமானவன். இருவரும் பிரிந்து விட்டால், திருமணத்தின் போது இருமணவீட்டார் சார்பில் பெண்ணுக்கு வழங்கிய நகை நட்டுக்கள், சீர்சாமான்கள் பெண்ணுக்கு உரியதாகும். மாப்பிள்ளைக்கு வழங்கிய அன்பளிப்புகள் மாப்பிள்ளைக்கு உரியதாகும். மாப்பிள்ளை விவாகரத்து செய்துவிட்டால், இத்தாக் காலச்செலவை பெண்ணுக்கு வழங்க வேண்டும் இவ்வாறே இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில் காணப்படுகிறது.

                        அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
                       ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்