ஞாயிறு, 31 மார்ச், 2013

தேசியவாதமும் இஸ்லாமும்

நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் மாணவர் முஹம்மது அப்துல் கனி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

காட்சி ஊடக பயங்கரவாதம்

மாணவர் அப்துல் பாசித் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

வியாழன், 28 மார்ச், 2013

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-9.

மௌலவி அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் வராஸத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தியது.

புதன், 27 மார்ச், 2013

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-8.

மௌலானா மௌலவி ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் மிஸ்பாஹி உலமா பேரவையில்  சிறப்புரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-7.

மௌலவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி மிஸ்பாஹி அவர்கள் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-6

மௌலானா மஹ்மூதுல் ஹஸன் ரஷ்ஷாதி ஹஜ்ரத் அவர்கள் பிக்ஹு ஓர் ஆய்வு என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தியது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-5.

மௌலவி தேங்கை ஷரப்புதீன் மிஸ்பாஹி அவர்கள் சொல்லாலுமை என்ற தலைப்பில் தேனினும் இனிய தமிழில் அனைவருக்கும் சுவையான சொற்பொழிவை சமர்பித்தார்கள்.

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-4.

மௌவ்லவி மஹ்மூத் மிஸ்பாஹி அவர்கள் மிஸ்பாஹிகளின் எழுச்சி என்ற தலைப்பின் கீழ் சிறப்பாக சொற்பொழிவு நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-3.

மௌலவி அப்துர் ரஹ்மான் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமாப் பேரவை 2013 சிறப்பு நிகழ்ச்சிகள்-2

மௌலவி சபியுல்லாஹ் பாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் இன்றைய ஜாமிஆ என்ற தலைப்பின் கீழ் சொற்பொழிவாற்றியது.

சனி, 23 மார்ச், 2013

வெள்ளி, 22 மார்ச், 2013

இரண்டாம் ஜமாஅத் தொழலாமா?



கேள்வி: மஹல்லா பள்ளிவாசல்களில் முதல் ஜமாஅத் நிறைவடைந்தபின் தாமதமாக வருகிற மக்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் இது சாதாரணமாக நடைபெறுகிறது மார்க்க தீர்வு என்ன?

பதில்: ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அதிகச்சிறப்பும் நன்மையும் வாய்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ருகூவு செய்பவர்களுடன் ருகூவுச் செய்யுங்கள் என ஏக இறைவன் இயம்புவதன் மூலம் கூட்டுத்தொழுகையை வலியுறுத்துகிறான்.
தனியாகத் தொழுவதைவிட கூட்டாகத் தொழுவதில் 27மடங்கு நன்மை அதிகரிக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
பாங்குச் சப்தத்தை செவிமடுத்து பள்ளி சென்று தொழ ஒருவரை எந்த தக்க காரணமும் தடுக்காவிட்டால் அவர் தனியாக நிறைவேற்றும் தொழுகை ஏற்கப்படமாட்டாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றபோது, தக்க காரணம் எது என சஹாபாக்கள் வினவினார்கள் எதிரிகளின் அச்சம் மற்றும் வியாதி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
மூன்று பேரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அவர்களில் ஒருவர் பாங்கு சப்தத்தைக் கேட்டு பள்ளிவாசலுக்கு வருகை தராதவர்
ஆதாரம்: அல்ஜாமிவுஸ் ஸகீர்
ஆக ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதை முஸ்லிம்கள் விட்டுவடக்கூடாது. அதையே (தொழுகையை விடுவதையே) தமது வாழ்வில் நிரந்தரமாக ஆக்கிக் கொள்வது அபாயம் மிகுந்ததும் பெரும் பாவமான செயலுமாகும்.
அதே சமயம் பள்ளியில் நடைபெறும் முதல் ஜமாஅத் சம்பந்தமாகத்தான் இந்த போதனை உள்ளது. இரண்டாம் ஜமாஅத்துக்கு இத்தகைய நன்மைகளோ கண்டிப்புகளோ கிடையாது. இரண்டாவது ஜமாஅதை வழமையாக்கிக் கொண்டால் முதல் ஜமாஅத்தின் எண்ணிக்கை குறைந்து விடும். அதற்குரிய மதிப்பும் அவசியத்தன்மையும் இல்லாமலாகிவிடும்.  நாளடைவில் முதல் ஜமாஅத் இரண்டாம் பட்சமாகி பலகீனமாகிவரும். அதற்குக் காரணம் இரண்டாம் ஜமாஅத்தினர்தான். இரண்டாம் ஜமாஅத்தில் நிரந்தரமாக ஈடுபடக்கூடியவர்கள் முதல் ஜமாஅத்தின் எண்ணிக்கை குறைந்து முக்கியத்துவம் இல்லாமல் போனதற்கு பொறுப்புதாரிகளாவர்.
எனவே முதல் ஜமாத் தவறிவிட்டால் பள்ளியில் இருப்போர் தனித்தனியாக தொழுவதே சிறப்பானதாகும் இரண்டாம் ஜமாஅத் மக்ரூஹ் ஆகும்.
قال اذا دخل القوم مسجدا قد صلي فيه اهله كرهت لهم ان يصلوا جماعة. ولكنهم يصلون وحدانا بغير اذان واقامة.
ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சஹாபாக்களுக்கு ஜமாஅத் தவறிவிட்டால் ஒன்று அவர்கள் வேறெங்கும் ஜமாஅத் நடைபெற்றால் அங்கு சென்றுவிடுவார்கள். அல்லது தனது பள்ளியிலேயே பாங்கு இகாமத் அல்லாமல் மஸ்ஜிதில் தொழுது கொள்வார்கள்.
எனவே ஜமாஅத் தொழுகையை அடைந்து கொள்ள விரைந்து  அது தவறவிட்டால் மேலே சொன்ன பல்வேறு நன்மைகளை கவனத்தில் கொண்டு பள்ளியில் தனியாகவே தொழவேண்டும்.
ஆதாரம்
பதாவா ரஹீமிய்யா பாகம் 3 பாகம் 7
                                                            அல்லாஹ் மிக்க அறிந்தவன்,
                                                            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்