புதன், 21 நவம்பர், 2012

மார்க்க விஷயத்தில் நெறிமுறையை கடைபிடிக்க கணவன் வலியுறுத்துவதற்காக ஒரு பெண் விவாகரத்து கேட்கலாமா?


கேள்வி:

ஒரு பெண் தன் அண்ணன் மகன் வீட்டிற்கு வந்திருக்கும்போது, நைட்டியுடன் இருக்கலாமா? இதில் கணவனுக்கு விருப்பமில்லாத நிலை உள்ளது! பையன் வயது19.
ஒரு பெண் தன் அண்ணன் மகன் சுமார் 19 வயது பையனையும், அவனது 8 வயது தங்கையையும் மற்றும் அவர்களுடன் 13வயதுக்கு வந்த மகளையும் வீட்டில் தங்கவைத்து வெளியில் செல்லலாமா?
மற்றும், இது போன்ற மார்க்க விஷயத்தில் நெறிமுறையை கடைபிடிக்க கணவன் வலியுறுத்துவதற்காக ஒரு பெண் அதிருப்தி அடைந்து ஒரு பெண் விவாகரத்து கேட்கலாமா?

பதில்:

மேற்கானும் கேள்வியில் உள்ளபடி,
நைட்டி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டில் அணிந்து கொள்ளும் பொதுவான உடையாக உள்ளது. அண்ணன் மகன்(மருமகன்) மேற்படி பெண்ணுக்கு மஹ்ரமாக உள்ளதால் (அவர் முன் நைட்டியுடன் நிற்பது) மார்க்கத்தில் தடை ஏதுமில்லை. ஆயினும், இது விஷயத்தில் கணவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது பெண்ணின் கடமையாகும்.
ஒரு நல்ல மனைவி, கணவன் இடும் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பாள் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மற்றும், மகள் வயதுக்கு வந்துள்ள நிலையில் அண்ணன் மகன் உடன் இருப்பது ஹராமாகும். அந்த அண்ணன் மகனின் தங்கை அவனுடன் (அண்ணன் மகனுடன்) இருந்தாலும் சரியே! எவ்வளவு காலம் அவர்கள் பழகியிருந்தாலும் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் ஹிஜாபுக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்.
ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் சிறுவயது முதலே நபியின் வீட்டுக்கு பணியாளராக வந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் அவர்களுக்கும் நாயகத்தின் துனைவியாருக்குமிடையே திரை விழுந்து விட்டது. சத்திய சஹாபாக்களே இந்த அறநெறியை கடைபிடித்துள்ளார்கள். இந்த நவீன காலகட்டத்தில் இந்த நெறிமுறை கடைபிடிப்பது ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்திலும் அவசியமாகும்.
மார்க்க விஷயத்தில் கறாராக இருக்கும் போது அதற்கு மனைவி முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அந்த விஷயத்தில் மனைவி கறாராக இருந்தால் கணவன் ஒத்துழைக்க வேண்டும். 
அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய சன்மார்க்கத்தை இருவரும் இணைந்து நல்லமுறையில் கடைபிடித்து வந்தால் அத்தகைய மணமக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று நபிகள் நாயகம் துஆச் செய்துள்ளார்கள்.
எந்த குற்றமுமின்றி ஒருவர் தனது கணவனிடம் தலாக் கேட்டால் அவர் மீது சுவன வாசனை ஹராமாகும் எனவும் கண்மணி நாயகம் கண்டித்துள்ளார்கள்.
பெண் தலாக் கேட்பதால் அவசரப்பட்டு கணவன் தலாக் தந்து விடக்கூடாது. காரணம் அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வுக்கு அதிக கோபம் தரக்கூடியது தலாக் ஆகும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கவனப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில் காணப்படுகின்றது.

             அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை விவாகரத்துச் செய்யலாமா?


கேள்வி:

எனக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்குப் பின்தான் மனைவியின் உடல் நிலை சரியில்லை என்பதுடன் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. சிறுவயது முதல் நோய் இருந்து வந்ததை மனைவி மூலம் தெரிய முடிந்தது. நான் பயணம் போகும் போதெல்லாம் மனைவியின் உடல்நிலை சரியாக இருப்பதில்லை. மனைவிக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்க, என்றாவது நலம் பெற்றுவிடுவார் என்று இவ்வளவு காலம் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வய்ப்பில்லை என்பதை இந்தப்பயணத்திலும் தெரிந்துக் கொண்டேன். டாக்டர்களின் வைத்தியத்தால் எந்த பயனுமில்லை. மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வாய்க்கு வந்தபடி பேசுவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரிக்காமல் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக இல்வாழ்க்கையும் அமைதியாக இல்லை. இந்நிலையில் என் மனைவியை விட்டு பிரிந்துகொள்ள வாய்ப்பு உண்டா?

பதில்

மேற்கண்ட நிலவரப்படி,
கரம் பிடித்த மனைவியினால் இது போன்ற மன உளைச்சல்கள் ஒரு கணவனுக்கு ஏற்படுகிற பட்சத்தில், தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாத சூழ்நிலையில், ஒரு கணவன் மாற்று யோசனை செய்து கொள்வதால் தவறில்லை. அல்லாஹ் அந்த பெண்ணுக்கு நிவாரணம் தந்து மாற்று துணையை தர போதுமானவன். இருவரும் பிரிந்து விட்டால், திருமணத்தின் போது இருமணவீட்டார் சார்பில் பெண்ணுக்கு வழங்கிய நகை நட்டுக்கள், சீர்சாமான்கள் பெண்ணுக்கு உரியதாகும். மாப்பிள்ளைக்கு வழங்கிய அன்பளிப்புகள் மாப்பிள்ளைக்கு உரியதாகும். மாப்பிள்ளை விவாகரத்து செய்துவிட்டால், இத்தாக் காலச்செலவை பெண்ணுக்கு வழங்க வேண்டும் இவ்வாறே இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில் காணப்படுகிறது.

                        அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
                       ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

புதன், 14 நவம்பர், 2012

கடல் வேட்டை! இமாம்கள் ஆய்வு செய்த்து எப்படி


இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் சட்டங்களை கூறும் பாங்கினைச்சிறிது அறிந்துகொள்வோம். அதன் வழியாக இமாம்களின் ஆய்வு முறையை அறிய முற்படுவோம், எடுத்துக்காட்டாக., கடல் வேட்டையும் அதன் உணவும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது என்ற அல்லாஹ்வின் சொல்லைப்பற்றி கூறுகின்ற பாடத்தலைப்பை எடுத்துக்கொள்வோம்.
அதில் வரும் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக நபித்தோழர்களான அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஷுரைஹ்(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் தாபியீன்களான நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறை அறிஞர்களான அதாவு(ரஹ்) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், பொதுவாக இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தமது கருத்துக்கு உறுதி சேர்க்கும் முகமாக ஹதீஸ் ஆதாரத்துடன்
 சஹாபாக்கள் தாபியீன்கள் ஆகிய இரு பிரிவினரின் கருத்துகளைக் கூறுவார்கள்.
வசனத்தின் விளக்கம்

கடலில் வேட்டையாடுவதும் ஸய்த் (صيد) அதன் உணவும் தஆம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

திங்கள், 12 நவம்பர், 2012

வாருங்கள் ஹாஜிகளை சங்கை செய்வோம்

அல்லாஹ்வின் வீட்டை தரிசித்துவிட்டு தங்களது தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் புனித ஹாஜிகளின் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி நாம் யோசித்துப் பார்பதற்கு இந்த ஜும்ஆவில் கடமைப்பட்டுள்ளோம். 

1.கண்ணியப்படுத்த வேண்டும்

தாயகம் திரும்புகின்ற ஹாஜிகளை அந்தந்த முஹல்லாவாசிகள் கட்டாயம் அவர்களை கண்ணியப்படுத்துதலும் சங்கைசெய்தலும் வேண்டும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுடைய நேசர்கள், அன்று பிறந்த பாலகர்களை போன்றோர்கள், அப்பலுக்கற்றவர்கள், பாவத்தைவிட்டும் பரிசுத்தமானவர்கள், நபியவர்களின் வார்தைப்படி போர்செய்வதைக்காட்டிலும் ஹஜ் செய்வது சிறந்தது என்ற சிறப்பினை அடையப்பெற்றவர், எல்லாவற்றிகும் மேலாக அல்லாஹ்வின் இல்லத்தையும் நபியவர்களின் ரவ்லாவையும் தரிசித்து வந்தவர் ஹாஜிமார்கள் என்பதை நாம் நினைவு கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

மனைவி அன்னியருடன் ஓடிவிட்டால் மறுமணம் செய்யலாமா

கேள்வி: எனது மனைவி சில மாதங்களுக்குமுன் அன்னியருடன்
 ஓடிவிட்டால் எங்குள்ளார் எனத் தெரியவில்லை. அப்பெண்ணின்
வீட்டாருக்கும் தெரியவில்லை. அப்பெண்ணின் ஊர் ஜமாத்தினரும்
எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறுகின்றனர். இனி அப்பெண்
என்னிடம் திரும்புவால் என்ற நம்பிக்கை இல்லை. மறுமணம் செய்து
கொள்ள விரும்புகின்றேன், இச்சூழலில் மறுமணம் செய்துகொள்ள மார்கத்தில் அனுமதி உண்டா ?

பதில்: மேற்காணும் கேள்வி உள்ளபடி....................

ஒரு பெண் அன்னியருடன் சென்றுவிட்டால் அப்பெண்ணுடனான விவாகரத்தை ரத்துச் செய்துவிட கணவணுக்கு உரிமை உண்டு.
மறுமணம் செய்துகொள்ள தடையில்லை. மறுமணம் செய்து கொண்டால்
இஸ்லாமிய ஷரீஅத் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, ஒரு மனைவிக்கு
கணவன் செய்துவர வேண்டிய கடமைகளை அல்லாஹ்வை அஞ்சி நன்கு
நிறைவேற்றி வரவேண்டும். ஒரு பெண் தன்னை விட்டும் பிரிந்து செல்ல
கணவன் காரணமாக இருந்துவிடக் கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் அப்பெண் செய்த பாவத்திற்கு அந்தக் கணவன் இறைவனிடம் பதில்
சொல்லியாக வேண்டும். இவ்வாறே இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில்
காணப்படுகிறது.
          
                                                                                  
                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
                         ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி


அஷ்ரப் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் உரை- நூற்றாண்டு விழா வீடியோ


O.M.அப்துல் காதர் ஹஜ்ரத் அவர்களின் உரை- நூற்றாண்டு விழா வீடியோ


நூற்றாண்டு விழா வீடியோ

அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் உரை

நூற்றாண்டு விழா வீடியோ

மௌலவி சதீதுத்தீன் பாக்கவி அவர்களின் உரை

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்