செவ்வாய், 25 டிசம்பர், 2012

அநீதமான காஜி பதவி வகிக்கலாமா?


கேள்வி : ஒரு காஜி பண மோசடி, கூட்டுசதி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவராக இருக்கலாமா? அப்படி ஈடுபட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கேஸ் பதிவாகியுள்ள நிலையில் அவர் காஜி பதவியில் நீடிக்கலாமா? மற்றும் அவர் நடத்தி வைக்கும் திருமணம், தலாக் போன்ற செயல்பாடுகள் செல்லுபடியாகுமா? இதற்கு ஷரீஅத்தின் தீர்வு என்ன?



பதில் : மேற்காணும் கேள்வியில் உள்ளபடி......

இஸ்லாமிய மார்க்க சட்ட நூல்களில் இவ்வாறு காணப்படுகிறது.
شرط القاضي : ذكر عدل
ஒரு காஜி ஆணாகவும் நீதிமிக்கவராகவும் இருப்பது நிபந்தனையாகும்.
وكذا لو فسق لم ينفذ حكمه في الاصح
காஜி பாஸிக் (குற்றமிழைப்பவர்)ஆக இருந்தால் சரியான முடிவின்படி அவருடைய தீர்ப்புரை செல்லாது.
نفذ قضائه للضرورة لئلا تعطل مصالح الناس
நிர்பந்தத்தைக்கருதி (அடுத்த காஜியிடம் பொறுப்பு தரும் வரை) ஊர் நன்மைகள் பாதிக்கபடாமலிருக்க அவருடைய தீர்ப்புரை (செயல்படுகள்) செல்லுபடியாகும்.
عَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إمَامَ قَوْمٍ بَصَقَ فِي الْقِبْلَةِ وَقَالَ لَا تُصَلِّ بِهِمْ بَعْدَ هَذَا أَبَدًا
(رواه ابو داود)
நாயகம் ஒரு இமாம் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பியதற்காக பதவி நீக்கம் செய்தார்கள். இனி இவர் ஒரு போதும் தொழுகை நடத்தக் கூடாதென கட்டளையிட்டார்கள்.
ஆதாரம்: அபூதாவூது.
காஜியை நீக்குவது பற்றி மார்க்க சட்ட நூல்களில் வருபவை
وكذا لو فسق أو زاد فسق من لم يعلم موليه بفسقه الأصلي في الأصح    فإن زالت هذه الأحوال لم تعد ولايته في الأصح وللإمام يجوز له عزل قاض ظهر منه خلل ككثرة الشكاوى منه أو ظن أنه ضعف أو زالت هيبته في القلوب وذلك لما فيه من الاحتياط أو لم يظهر منه خلل وهناك أفضل منه أو هناك مثله أو دونه وفي عزله به مصلحة كتسكين فتنة لما فيه من المصلحة للمسلمين.  
(تحفة المحتاج)
மேலும் சஹீஹான கருத்தின் பிரகாரம் காஜியாகிறவர் பாவம் செய்தாலும் அல்லது அவருடைய பாவச்செயல் அதிகரித்தாலும் அதனுடைய சட்டமும் இவ்வாறு தான் (காஜியை நீக்குதல் வேண்டும்). ஒரு வேலை காஜியை நியமித்தவர் அவருடைய பாவத்தை அறியவில்லை என்றாலும் சரியே (காஜியை நீக்குவது கூடும்).   சஹீஹான கருத்தின் பிரகாரம் இந்த நிலமைகளை (பாவச்செயல்களை) விட்டும் காஜி நீங்கிவிட்டலும் அவருடைய பதவி திரும்பாது.
1.இமாமுக்கு (மேல் அதிகாரத்தில் உள்ளவர்) காஜியிடமிருந்து ஏதேனும் குறை தென்பட்டால் அவரை (காஜியை) நீக்குகின்ற உரிமை இமாமுக்கு உண்டு. உதாரணமாக அவர் மீது அதிகமான புகார்கள் வருவது, அல்லது அவர் பலகீனமாகிவிட்டார் என்று எண்ணுதல், அல்லது அவருடைய பயம் (கண்ணியம்) மக்களுடைய உள்ளங்களிலிருந்த நீங்கிவிடுவது. இவ்வாறு இருந்தால் பேணுதல் அடிப்படையில் காஜியை நீக்கலாம்.
2. இமாமுக்கு காஜியிடமிருந்து குறை தென்படவில்லை அனால் அவரை (காஜியை) விட அங்கு (மஹல்லாவில்) சிறந்தவர் இருக்கிறார் அல்லது அவரை (காஜியை) போன்றவர் இருக்கிறார் அல்லது அவரை (காஜியை) விட கீழானவர் இருக்கிறார், இந்நிலையில் அவரை (காஜியை) நீக்குவதில் நலம் இருக்கிறது என்றால் அவரை (காஜியை) நீக்குவது கூடும். உதாரணமாக குழப்பத்தை அமைதிபெறச் செய்தலில் முஸ்லிம்களின் நலம் இருப்பதினால் காஜியை நீக்குவது கூடும்.
எனவே பெரிய பாவங்களில் ஈடுபடும் காஜி பொறுப்பில் இருப்பது தகுதியல்ல என்பதே ஷரீஅத்தின் தீர்ப்பு ஆகும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்