ஞாயிறு, 24 மார்ச், 2019

‎பட்டமளிப்பு விழா - 2019


பிஸ்மிஹி தஆலா
‎ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் ‎அளப்பெரும் அருளால் ‎இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 14/04/2019 அன்று ‎நமது ஜாமிஆ ‎மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 73 ஆம் ஆண்டு ‎பட்டமளிப்பு விழா ‎நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 32 பாஜில் மிஸ்பாஹிகளும் 7 ஆலிம் ‎மௌலவி மிஸ்பாஹிகளும் 3  ஹாபிழ்களும் ஸனது பெற இருக்கிறார்கள். இந்த நன்நிகழ்வில் திண்டுக்கல் யூசுபிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ‎ அல்ஹாஜ் P.M முஹம்மது அலி அன்வாரி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை ‎நிகழ்த்த ‎இருக்கிறார்கள். மேலும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ‎அரபிக்கல்லூரியின் பேராசிரியர் M.அப்துல் ஹமீது பாஜில் பாகவி ஹஜ்ரத் ‎அவர்களும் ஆலிஜனாப் மு.தமீம் அன்சாரி (நாகை சட்டமன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். ‎
‎ அதற்கு முந்தைய தினம் ஏப்ரல் 13/4/19 சனிக்கிழமையன்று ‎இஷாவிற்குப் பின் ‎நடக்கும் பெண்கள் பயானில் தூத்துக்குடி ஜாமிஆ மன்பஉஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரியின் ‎முதல்வர் மௌலவி M.முஹம்மது இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி ஹஜ்ரத் ‎அவர்கள் சிறப்புரையாற்ற ‎இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் ‎அனைவரும் கலந்து பயனடையுமாறு ‎கேட்டுக் கொள்கிறோம். ‎
‎ அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், ‎உலமா ‎பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் ‎தகவலை எத்தி ‎வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் ‎பிரார்த்தியுங்கள்.‎

       இப்படிக்கு,

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

நீடூர் நெய்வாசல்.நாகை –DT.

PH:04364-250173







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்