பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 14/04/2019 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 32 பாஜில் மிஸ்பாஹிகளும் 7 ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 3 ஹாபிழ்களும் ஸனது பெற இருக்கிறார்கள். இந்த நன்நிகழ்வில் திண்டுக்கல் யூசுபிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் P.M முஹம்மது அலி அன்வாரி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். மேலும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் M.அப்துல் ஹமீது பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்களும் ஆலிஜனாப் மு.தமீம் அன்சாரி (நாகை சட்டமன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய தினம் ஏப்ரல் 13/4/19 சனிக்கிழமையன்று இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் தூத்துக்குடி ஜாமிஆ மன்பஉஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி M.முஹம்மது இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.