வெள்ளி, 30 மார்ச், 2018

ஜல்ஸா - 2018


பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 29/04/2018 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 72 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 57 பாஜில் மிஸ்பாஹிகளும் ‎‎9 ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள். இந்த நன்நிகழ்வில் மதுரை ஒத்தக்கடை நாபிஃவுல் உலூம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மற்றும் நிறுவனருமான மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.முஹம்மது காசிம் பாகவி MA, LLB ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். மேலும் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியின் முதல்வர் SS. ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய தினம் ஏப்ரல் 28/04/2018 அன்று இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் நமது ஜாமிஆவின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது கரம்பக்குடி பத்ரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மௌலவி K.அப்துர்ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

 இப்படிக்கு,

                   ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா
                   நீடூர் – நெய்வாசல்.நாகை –DT.






                                                                                                    ‎‎                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்