வியாழன், 27 மார்ச், 2014

18.03.2014 செவ்வாய் கிழமை ஜாமிஆவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள் .




மலேஷியா ஜுஹர்பாரில் மஸ்ஜிதே இந்தியாவில் இமாமாகப் பணியாற்றும் கண்டியூர் மவ்லவி ஹாபிஸ் காரி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி அவர்கள் தொகுத்த ஓராண்டு ஜும்ஆ உரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 51வாரங்களுக்கான கட்டுரைகள் தனித்தலைப்புகளில் கணினியிலிருந்து கட்டுரைகளை தொகுக்கப்பட்டது.
இந்த நன்மையான காரியத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொண்டு அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நற்கிருபை செய்வானாக.
நிகழ்வு 2
மற்றும் மதரை டவுன் ஹால் ரோடு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாபிஸ் முஹம்மது ரபீக் மிஸ்பாஹி சமுதாயப் பார்வையில் ஆலிம்கள் என்ற தலைப்பில் அழகிய நூலை வெளியிட்டார். சங்கைமிகு உலமாக்கள் சபையில் வெளியிட்டு அனைவருடைய துஆக்களுக்கு பாத்திரமானார்.
உலமாக்களின் கண்ணியத்தையும் அவர்கள் இன்றைய காலத்தில் செய்துவரும் தியாகத்தையும் எந்தெந்த வகையில் அவர்களுக்கு சோதனைகள் நிலவுகின்றன அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை துள்ளியமாகவும், துணிவுடனும் விவரித்துள்ளார்.
இந்த இளம் ஆலிமின் இதய வேட்கைகளை எல்லோரும் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியதுள்ளது.
அனைவருடைய படைப்பை அல்லாஹ் கபூல் செய்து பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
                                                                                                                        ஹதியா:   50
                                                                                                                        முகவரி:
                                                                                                                        டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
                                                                                                                        மதுரை-625001
                                                                                                                        செல் நம்பர்- 9994375238
                                                                                                                  Email: Mishbahi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்