கேள்வி : உள் பள்ளியில் திரை கட்டிக்கொண்டு ஒரு பக்கம் ஆண்களும் மறுபக்கம்
பெண்களும் தொழுவது நல்லதா? இன்னும் பள்ளியின் மேல் பகுதியிலோ
அல்லது பள்ளியின் மற்றொரு பகுதியிலோ ஜும்ஆ தொழுகை பெருநாள் தொழுகை மற்றும் தராவீஹ்
தொழுகையில் பெண்கள் இமாம் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவது நல்லதா? பள்ளியில் ஒரு பக்கம் நிஸ்வான் மதரஸா நடத்துவது நல்லதா?
பதில்: மேற்கூறிய கேள்வியில் உள்ளபடி............
ஒரு இஸ்லாமியப் பெண் தமது
வீட்டிலேயே மறைவான இடத்தில் தொழுவதுதான் ஷரீஅத்தின் பார்வையில் மேலானதும் அதிக
நன்மையுடையதுமாகும். இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள். (ஆதாரம் புகாரி, அபுதாவூத்)
நாயகம்
வாழ்ந்த காலத்தில் இதற்கு அனுமதி இருந்தது. குர்ஆன் வசனங்கள் இறங்கிய வண்ணம்
இருந்ததால் தஃலிமாத்துகள் நடைபெற்றவாறிருந்தன. அந்தக் காலம் خير
القرون உன்னதமான பொற்காலமாகும்.ஆனால் அதற்கு பிந்தைய காலத்தில்
நிலமை மாறிவிட்டது. பெண்களின் குணக்கேடுகளைப் பார்த்து உமர்(ரலி) அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுத்தவாறு இருந்தனர்.
பெண்களின் செயல்பாடுகளைப் பார்த்து ஆயிஷா(ரலி) அவர்களும் தங்களின் மனவேதனையை வெளிபடுத்தியவாறிருந்தனர். எனவே ஐவேளை தொழுகையானாலும்
ஜும்ஆ மற்றும் ஈதுத் தொழுகையானாலும் பெண்கள் பள்ளிக்கு வருவதை மக்ரூஹ் வெறுக்கத்தக்க
செயல் என்று மார்க்க விற்பன்னர்கள் தீர்ப்புச் செய்துள்ளனர்.
குறிப்பாக இன்றையகாலம் மிக மோசமாக
இருப்பதால் பெண்கள் பள்ளிக்கு வருவதையும் மேற்கண்டவாறு செயல்படுத்துவதையும்
முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இந்த வகையில் உள்ளதுதான் பள்ளியில் மாடியிலோ அல்லது
ஒரு பகுதியிலோ நிஸ்வான் மதரஸா நடத்துவதுமாகும். நிஸ்வான் பாடசாலையை தனியாக
உருவாக்கி அங்குவைத்து பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிக்க வேண்டும்.
நூல் ஆதாரம் பதாவா ரஹீமிய்யா பக்கம் 171 பாகம் 1
இப்படிக்கு
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக