பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹூம்
கேள்வி:
நான் மூன்று
ஆண் மக்களையும், ஜந்து பெண் மக்களையும் பெற்றெடுத்தேன். எனது வயோதிகத்தில் எந்தவொரு பிள்ளையாலும்
கவனிக்கப் படாமல் நான் இருந்து வருகிறேன். எனது சுய சம்பாத்தியத்தில் தேடி
வைத்துள்ள சொத்துகளை சொந்தம் கொண்டாட விரும்பும் பிள்ளைகள் என்னை கவனிக்கவில்லை. எனது
சுய சம்பாத்தியத்தில் தேடி வைத்துள்ள சொத்துக்களை அறக்கட்டளை அமைத்து அறவழியில்
பராமரிக்கவோ, அல்லது நான் விரும்பும் பிள்ளைகளுக்கு எழுதி
வைக்கவோ எனக்குள்ள ஷரிஅத் அடிப்படையிலான உரிமையை தங்களின் மார்க்க தீர்ப்பு (பத்வா) மூலம் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.
பதில்: மேற்காணும் கேள்வியில் கண்டுள்ளபடி ஒருவர் தமது சுய
சம்பாத்தியத்தில் தேடி வைத்த சொத்துக்களை மேற்கண்டவாறு அறக்கட்டளை அமைத்து
அறவழியில் பராமரிக்க ஷரீஅத்தில் எந்தத் தடையுமில்லை. அவருடைய மறைவுக்குப்பின்பும்
சதகதுன்ஜாரியா நிரந்தர தர்மத்தினுடைய நன்மைகள் கிடைத்தவாறிருக்கும். அல்லது தான்
உயிருடன் உள்ளபோது தாம் விரும்பும் பிள்ளைகளுக்கு சொத்துக்களை பதிவு செய்துதர
ஷரீஅத்தில் உரிமையுண்டு. முறைப்படி ரிஜிஸ்தர் செய்ய வேண்டும். வாரிசு முறைப்படி
சொத்துக்களை ஷரீஅத் முறையில் பங்கீடு செய்வது என்பது ஒருவருடைய மறைவுக்குப் பின்புதான்.
எனவே கேள்வியில் கண்டுள்ள விபரப்படி ஒருவர் உயிருடன் உள்ளபோது, தான் விரும்பியபடி
செயல்படலாம். பிள்ளைகள் பெற்றோரை நல்லமுறையில் பராமரிக்க வேண்டுமென குர்ஆனிலும்,
ஹதீஸிலும் கணிசமான முறையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை பிள்ளைகள் இன்றையகால
கட்டத்தில் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமது பெற்றோரை நல்லமுறையில்
பேணாதவர் பிற்காலத்தில் அவரது பிள்ளைகளால் பேணப்படமாட்டார் எனவும் ஹதீஸில்
எச்சரிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இப்படிக்கு,
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக