ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தக்லீத் ஒரு பார்வை


தக்லீத் என்றால் என்ன?

தக்லீத் எனும் அரபுச் சொல்லுக்கு ஒருவரை நம்பி பின்பற்றுதல் என்பது பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கில் இமாம்களைப் பின்பற்றுவதற்கு தக்லீத் எனப்படும்.

தக்லீத் செய்வது கூடுமா ?

கூடும் என்ற சொல்லை கடந்து சில வேளை கடமையும் கூட.
நீங்கள் அறியதவராக இருந்தால் வேத ஞானம் உடையவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்....16.43
என்று திருகுர்ஆன் கூறுகிறது.
இறைவனின் கடைமைகளை வேதங்களிலிருந்து புரிந்து கொள்ள இயலாதவர்கள் அறிஞர்களிடம் செயல்படுவது கடமையாகும்.
குர்ஆன் இன்னொரு இடத்தில்
அவர்கள் அதனை ரசூலிடமோ பொருப்புள்ளவர்களிடமொ தெரிவித்தால் அவர்களில் ஊகித்தறியும் ஆற்றலுல்லவர்கள் அறிந்து கொள்வார்கள் 4..83

எனக் கூறுவதின் மூலம் ஞானம் உடையவர்களில் கூட ஊகித்தறியும் சக்தி சிலருக்குத்தான் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டி அவர்களை பின்பற்றும் படி கூறுகிறது.
ஏன்  நரகத்திற்கு வந்தீர்கள் எனக் கேட்ட பொழுது, நரகவாசிகள் சொன்ன பதிலை குர்ஆன் இப்படி கூறுகிறது.
நாங்கள் சிந்தித்தோ அல்லது செவிமடுத்தோ இருந்தால் நரகிற்கு வந்திருக்க மாட்டோம் .அல்குர்ஆன்
பிறரிடம் கேட்டு செயல்படுவது நரகினை விட்டுப் பாதுகாக்கிறது.
சரியான ஞானம் இன்றி ஒருவன் மார்க்க தீர்ப்பு வழங்கினால் அதனால் ஏற்படும் பாவம் அவனையே சேரும்.
என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்-அபுதாவுத்
இதிலிருந்து ஒருவர் தெளிவாக தீர்ப்பு வழங்கினால் அதனை மற்றவர் பின்பற்றலாம் எனத் தெரிகிறது.

தக்லீத் கூடாது என்று குர்ஆன் கூறுவதாக சிலர் கூறுகின்றனரே....

அவர்கள் எடுத்துக்காட்டும் குர்ஆன் வசனங்களை பாருங்கள் மக்காவாசிகள் நபி(ஸல்)...அவர்கள் ஏக்த்துவ கொள்கையை முன் வைத்த போது அதனை மறுத்து எங்கள் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவோம் என்றார்கள், இந்த தக்லீதை அல்லாஹ் கண்டிக்கிறான்.
உதரணமாக அல்பகரா அத்தியாயத்தின் 170-வது வசனத்தை எடுத்துக் காட்டுங்கள்
அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேத்த்தை பின்பற்றுங்கள் என அவர்களிடம் கூறப்பட்டால் அவ்வாறல்ல எவ்வழியில் எங்கள் முன்னோர்கள சென்றார்களோ அவ்வழியை நாங்கள் பின்பற்றுவோம் என்கிறார்கள். என்ன? அவர்களின் முன்னோர்கள் எதையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலும் பின்பற்றுவார்கள்?
இவ்வசனத்தில் அவர்கள் தெளிவான குர்ஆனின் கருத்துக்கு மாற்றமான  வழியை பின்பற்றினார்கள் என்பதும் அவர்கள் முன்னோர்கள் அறிவிலிகாளாகவும் வழி கெட்டவர்களாகவும் இருந்த காரணத்தினால் பின்பற்ற தகுதியில்லாதவர்கள் எனவும் புரிகிறது.
அத்தகையோரை பின்பற்றுவதை குர்ஆன் கண்டிக்கிறது
மாறாக குர்ஆனின் தெளிவான உறுதியான கருத்துக்கு மாற்றமில்லாத விஷயங்களில் சரியான அறிவும் நேர்வழியும் பெற்ற அறிஞர்களை பின்பற்றுவது எப்படி தவறாகும்? பொதுவாக முன்னோர்களை பின்பற்ற வேண்டாம் என அல்குர்ஆன் கூறவில்லையே?
அதே குர்ஆனில் நான் என் முன்னோகளான இஸ்ஹாக் யாகூப் ஆகியோரின் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என நபி யூசுப் (அலை) அவர்கள் கூறுவதாக வரும் ஒரு வசனத்தில் முன்னோர் ஆபாஉ  எனும் சொல்லே இடம் பெற்றுள்ளது.

நபித் தோழர்கள் தக்லீத் செய்துள்ளார்களா,.

ஏன் இல்லை? இதோ ஸஹூஹில் புகாரியில் வரும் பின்வரும் அறிவிப்பை பாருங்கள்
மதினா வாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒரு பெண் கடமையான தவாபை முடித்த பின் அவளுக்கு வந்து விட்டால் என்ன செய்வது? சுத்தமாகும் வரை பொறுத்திருந்து தவாபுல் வதாவை முடிக்க வேண்டுமா அல்லது தவாப் செய்வது வேண்டியதில்லையா என்று கேட்டார்.  
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவள் திரும்பி செல்லலாம் தவாப் செய்ய தேவை யில்லை என்றார்கள். அப்போது மதினா வாசிகள் நீங்கள் சொல்வது ஹழ்ரத் ஜைத் பின் ஸாபித் அவர்களின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது எனவே உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்ரகொள்ள மாட்டோம் என்றனர். ,ஸஹிஹூல் புகாரி
இந்த ஹதிஸின் விளக்கவுரையில் அபூதாவூதை மேற்கோள்காட்டி பின் வரும் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது ..இப்னு அப்பாஸ் அவர்களின் பத்வாவை ஏற்றுக்கொள்ள மறுத்து ஜைத் (ரலி) அவர்களின் கருத்தையே ஏற்றுக் கொள்வோம் என மதினா வாசிகள் கூறிய பொழுது நீங்கள் என்னுடைய கருத்தை உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டு
உறுதி படுத்தி கொள்ளுங்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள். மக்காவில் இருந்து திரும்பி சென்ற மதினா வாசிகள் உம்மு ஸூலைம்(ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களின் கருத்தையே உருதி செய்தார்கள். இதனை மதினா வாசிகள் ஜைத்(ரலி) அவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் தாம் சொன்ன கருத்தை மாற்றிக் கொண்டு இப்னு அப்பாஸ் அவர்களின் கருத்தையே ஏற்றுக் கொண்டார்கள்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஸஹாபாக்கள் காலத்தில் தனி மனிதரை நம்பி தக்லீத் செய்யும் வழக்கம் இருந்த்து    என்பது புரிகிறது. அத்துடன் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் ஜைத்(ரலி) அவர்களின் கருத்தையே ஏற்றுக் கொள்வோம் என மதினா வாசிகள் கூறிய பொழுது இது தனி நபர் தக்லீத் ஷிர்குர் ஃபிந் நுபுவ்வத் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கண்டிக்கவில்லை. என்பதிலிருந்தே தக்லீதை எதிர்க்கவில்லை என்பதும் புரிகறது.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் சிறந்த   சஹாபியான் அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டார்கள் வழியில் ஒட்டகங்கள் காணாமல் போய்விட்டது எனவே ஹஜ் காலம் முடிவடைந்த பின்பே  அவர்கள் மக்கா வந்து சேர்ந்தார்கள்
அதனை பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது உம்ராவிற்குண்டான செயல்கள் முடித்து கொண்டு இஹராமை களைந்து கொள்ளுங்கள் அடுத்த ஆண்டு ஹஜ் செய்து இயன்ற அளவு குர்பானி செய்யுங்கள் என் உமர் (ரலி) அவர்கள் கூற அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 
உமர்(ரலி) அவர்களிடம் ஆதாரம் எதுவும் கேட்க வில்லை. இதிலிருந்து சுயமாக் சிந்தித்து செயல்படுத்த இயலாத ஸஹாபாக்கள் இஜ்திஹாத் செய்யும் ஆற்றல் பெற்ற ஸஹாபாக்களிடம் சட்டங்களை கேட்டு செயல்பட்டுள்ளனர். இதற்கு பெயர்தான் தக்லீத் இதே போன்றே பல நிகழ்ச்சிகளை நபித்தோழ்ர்கள் வாழ்க்கையிலும் தாபிஈன்கள் வாழ்க்கையிலும் பார்க்கலாம்.

தக்லீத் ஏன் செய்ய வேண்டும் நேரடியாக குர்ஆன் ஹதிஸையே பின்பற்றலாமே?


இந்த வாதம் கேட்பதற்கு எளிதாகவும் வரவேற்கதக்கதாகவும் தெரிகிறது.
ஆனால் நடைமுறையில் இது சிக்கல் நிறைந்ததும்  மனம்போல் ஹதீஸை பயன்படுத்துவதற்கும் வகுப்பதாகவும் அமைந்துவிடும்.
இஸ்லாம் பரிபூரணம் மார்க்கம் நபி (ஸல்) அவர்கள் இறுதியாக அனுப்பப்பட்ட நபி இவ்வுலகம் அழியும் வரை ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்கள் தான் நமக்கு வழிகாட்டி. தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளினாலும், திருமணம் ,தலாக் குல்உ , ஃபஸ்க், நஃபகா போன்ற தனிமனித மற்றும் குடும்ப விவகாரமானலும் வியாபாரம் , விவசாயம் , கொடுக்கல் ,வாங்கல் , ஆட்சி , அரசியல் என சமுதாய விவகாரமானாலும் அத்தனைக்கும் அண்ணலாரே நமக்கு முன்மாதிரி.
இத்தனை பிரச்சனையும் இறுதி நாள் வரை காலத்திற்கு ஏற்ப உருவாகும்    சூழ்நிலைகேற்ப நாம் அண்ணலாரின் சுன்னத்திலிருந்து நாம் தீர்வு கண்டாக
 வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தெளிவான திட்டவட்டமான
 ஹதீஸ் கிடைப்பது அரிது. அந்நிலையில் பெருமானார்(ஸல்) அவர்கள் 
கோடிட்டு காட்டியிருக்கும் ஹதீஸ்களிலிருந்து ஊகித்து எடுக்க வேண்டும்.
 அது மாத்திரமின்றி ஒரு பிரச்சனையில் அது சம்பந்தமாக 
அறிவிக்கபட்டிருக்கும் அத்தனை ஹதீஸ்களையும் தேடிப்பிடித்து
 அதனுடைய நிலைகளை ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வ வேண்டும்.
இது எல்லா மனிதர்களாலும் முடிகின்ற காரியமல்ல. ஏனென்றால்
 மனிதர்களுக்கு ஒரே மாதிரி அறிவும் சிந்தனையும் கொடுக்கபடவில்லை. 
ஒரு அறிஞனின் கருத்தை விமர்ச்சிக்கின்ற பொழுது ஒவ்வொரு 
மனிதனும் தன்னுடைய அறிவிற்கு ஏற்ப அவன் வாழ்கின்ற சூழ்நிலையில்
 ஏற்படுகின்ற சிந்தனைக்கேற்பவே விமர்ச்சிப்பான் இதனை நாம் 
நிதர்சனமாகக் காணலாம். சில மனிதர்களால் சிந்திக்கவே இயலாமல் 
பிறரிடம் ஆலோசனை கேட்பதையும் நாம் பார்க்கிறோம். இந்நிலையில் 
நேரடியாக குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்து ஒவ்வொரு மனிதனும்
 பின்பற்ற இயலுமா?
அத்துடன் நபி(ஸல்) அவர்களே கூட மனிதர்கள் சிந்திக்கும்  விஷயத்தில்
 வித்தியாசப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.
யார் தன்னுடைய பேச்சை செவிமடுத்து, தன் நெஞ்சில் பாதுகாத்து, பின் 
அதனை அதனை ஒப்படைக்கிறாரோ அத்தகைய அடியானை அல்லாஹ் 
பசுமையாக்கி வைப்பானாக.
ஏனென்றால் ஞானத்தை சுமந்துள்ளவர்களில் சிலர் அந்த் ஞானத்தை 
புரியாதவராக இருப்பார். ஞானத்தை சுமந்திருக்கும் சிலர் அவரை விட 
ஞான்த்தை விளங்கி கொள்ளக்கூடியவரிடம் அதனை ஒப்படைப்பார்.
ஆதாரம்: முஸ்னது அஹ்மத் ,திர்மிதி ,அபூதாவூத் ,இப்னு
மாஜா ,தாரமி.
இந்த ஹதீஸில் அறிவிப்பாளரை விட அதை கேட்பவர் நன்கு கருத்தை தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவராக திகழ்வார் என்பது புரிவதுடன் மனிதர்களில் சிந்திக்கும் ஆற்றல் எல்லோரிடமும் இல்லை என்பதும் புரிகிறது.
நபி(ஸல்) அவர்கள் கால்த்தில் வாழ்ந்து அவர்களின் நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்த நபி தோழர்கள் கூட குர்ஆனின் கருத்துகளை விளங்கி கொள்வதில் தடுமாறி இருப்பதை நாம் பார்க்கிறோம். அதீ பின் ஹாத்திம்(ரலி) என்ற சஹாபி நோன்பின் சஹர் நேரம் பற்றிய விளக்கத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறை பற்றி  புஹாரியில் வரும அறிவிப்பு பிரபல்யமான ஒன்றாகும்.
உர்பா பின் ஜூபைர்(ரலி) அவர்கள் கூறியாதாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்,
 நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் உள்ளவை ஆகும் எனவே யார் ஹஜ் உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அந்த் இரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல
என்ற வசனத்தைப் பற்றி இந்த வசனத்தில் இருந்து ஒருவர் ஸஃபா மர்வா மலைகளை சுற்றிவராவிட்டால் குற்றமில்லைதானே؟ என்று நான் கேட்டேன் அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் என் சகோதரி மகனே நீ தவறாக சொல்கிறாய். நீ சொல்வதை போன்று கருத்து இருந்தால், வசனம் அவ்விரைண்டையும் தவாப் செய்யாமல் இருந்தால் குற்றமல்ல என்றல்லவா இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இமாம் ஸூஹ்ரி (ரஹ்) கூறுகிறார்கள் இந்த அறிஞர் அபூபக்கர் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபொழுது இத்தகைய ஞானம் நான் கேள்விப்படாத ஒன்று என்கிறார்கள்.
 ஸஹூஹீல் புகாரி ,ஸஹூஹுல் முஸ்லிம்
மேற்குறிபிட்ட கருத்து குர்ஆனின் கருத்துகளை விளங்குவதில் மனிதர்களிடையே வித்தியாசம் உண்டு என்பதை தெளிவு படுத்துகிறது.
இந்த வசனம் வெகுநுட்பமான ஒன்றல்ல இருப்பினும் உர்வா(ரலி) அவர்களால் அதன் கருத்தை விளங்க இயலவில்லை ஆனால் ஹழ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அந்த நுட்பமான அறிவு நுட்பத்தை பற்றியே அபூபக்கர் பின் அப்துர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வியந்து பாராட்டினார்கள். நபித் தோழர்கள் லட்சக்கணக்கான பேர் இருந்தும் மார்க்க சட்ட நுனுக்கங்களை கூறிய சஹாபா பெருமக்கள் மிக்க குறைவே. பெரும்பாலும் ஸஹாபா பெருமக்கள் மற்ற ஸஹாபிகளிடம் கேட்டு தான் மார்க்கத்தை பின்பற்றியுள்ளார்கள். ஸஹாபாக்களில் ஃபத்வா தந்த ஸஹாபாக்கள் நூற்றுக்கும் சற்று அதிகம் எனப் பட்டியலிட்டு காட்டும் ஹாபிழ் இப்னு கய்யிம்(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 751 அந்த ஸஹாபிகளில் கீழ்கானும 7 பேர் தான் அதிகமா மார்க்க விஷயங்களில் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர் என்கிறார்கள்.

 1.ஹழ்ரத் உமர்(ரலி) 2,ஹழ்ரத் அலி (ரலி) 3.ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) 4. ஹழ்ரத் ஆயிஷா(ரலி) 5. ஹழ்ரத் ஜைத் பின் ஜாபித்(ரலி) 6.ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) 7.ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
ஸஹாபா பெருமக்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருகேயே இருந்து ஞானம் பெற்றவர்கள் அவர்களே, ஞானம் பெற்ற மற்ற  தோழர்களை கேட்டு மார்க்கத்தை பின்ப்ற்றினார்கள் என்றால் நாம் நேரடியாகவே ஹதீஸை பின்பற்றுவதை விட ஆழ்ந்த ஞானமும் அல்லாஹ்வின் அச்சமும் பேணுதலும் உடைய இமாம்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் பின்பற்றுவது ரொம்பவும் சரியானது.
போலி வாதம்
சிலர் நாங்கள் யாரையும் பின்பற்றாமல் குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்றுவோம் என வாதாடுகிறார்களே? அது ஒரு போலித் தனமான வாதம் அவர்கள் ஹதீஸை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை பாருங்கள். அவர்களில் ஞானமிக்க ஒருவர் இவ்விசயத்தில் இப்படித்தான் ஹதீஸ் வந்திருக்கிறது என்பார் உடனே அவர் சொல்லுகிற ஹதீஸை ஏற்று செயல்பட ஆரம்பிக்கிறார்கள். இதற்கு அவர்கள் ஹதீஸை பின்பற்றுகிறோம் என்கிறார்கள். அவர் சொன்ன ஹதீஸ் மட்டும்தான் இருக்கிறதா அல்லது அது சம்பந்தமான வேறு ஹதீஸ்கள் இருக்கின்றனவா என்பதை எல்லாம் அவர்கள் ஆராய்வதில்லை. இது அவரை பின்பற்றுவது தானே என்றால், அவர் தருவது தகவல் தான்.  அந்த தகவலை வைத்துக்கொண்டு நாங்கள் சுயமாக ஹதீஸை பின்பற்றுகிறோம் என விவாதம் செய்வார்கள். எந்த அளவு என்றால் தகவல் தருபவர் சிறிது காலம் சென்றதும் நான் ஏற்கனவே தந்த தகவல் தவறானது இதோ இப்பொழுது இந்த தகவல் கிட்டியது, இது தான் சரி என்றால், இவர்களும் சரி சரி என்று தங்கள் கருத்தினை மாற்றிக் கொள்வார்கள். இதிலிருந்து அவர்கள் ஒருவர் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பி விடலாம் என்பது புரிகிறது.

உதாரணத்திற்கு மத்ஹபுகளை கண்மூடித்தனமாக தக்லீத் செய்கிறார்கள் என்று கூறி தூய வழியில் இஸ்லாத்தை காட்டுவதாக புறப்பட்ட ஒருவர், கடந்த பத்து ஆண்டுகளில் தன் கருத்துக்களை பல முறை மாற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் தன் கருத்துக்கு ஆதரவாக குர்ஆன் வசனமும் ஹதீஸூம் இருப்பதாக கூறிக்கொள்கிறார். அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளும் போதெல்லாம் அவரை பின்பற்றுபவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
பிறை பார்த்தல், பன்றி மாமிசம் சாப்பிடுதல், பெண்கள் ஹிஜாப் சிஷ்டம் ,போட்டோ எடுத்தல் ,போன்ற பல விஷயங்கள் இதற்கு உதாரணமாக சொல்ல்லாம். அவரை பின்பற்றக் கூடியவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடியவராக இருந்தால் அவர் சொன்ன முதல், குர்ஆன் ஹதீஸை  ஆய்வு செய்து ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறின்றி. அவர் கருத்தை மாற்றும் போதெல்லாம் தாங்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டே இருப்பதன் மூலம் அவரைத்தான் தக்லீத் செய்கிறார்கள் என்று தெரியவருகிறது.
உண்மையை சொல்வதானால் ஹதீஸை பின்பற்றுவோர் எனும் பெயரில் ஒரு கூட்டம் உருவாகி அவர்கள் பெயர் சொல்லப்படாத இமாம்களை பின்பற்றுகிறார்கள் எனவே அதுவும் இப்போது ஒரு மத்ஹபாக உருவாகி விட்டது. இதை அவர்கள் மறுத்தாலும் உண்மை நிலை அது தான்.

மத்ஹப் என்றால் என்ன

மத்ஹப் என்ற அரபி வார்த்தைக்கு செல்லும் இடம் என்று பொருள். பின் நம்பிக்கை எனும் பெயரில் உபயோகிக்கப் பட்டது. இஸ்லாமிய ஷரீஅத்தில ஒருவர் இஜ்திஹாத் செய்து எடுக்கும் முடிவுக்கு அவரின் மத்ஹப் என்பார்கள்.

மத்ஹப் எப்பொழுது தோன்றியது

நபித்தோழர்கள் காலத்திலேயே மத்ஹப்கள் தோன்றிவிட்டன . நபித்தோழர்கள் ஒரே விஷயத்தில் இஜ்திஹாத் அடிப்படையில் கருத்து வேற்றுமை கொண்டார்கள் ஸஹாபாக்களில் சிலர் தங்களுக்கு பிடித்தமான ஸஹாபியை பின்பற்றினார்கள். எனவே அக்காலத்தில் பல மத்ஹப்கள் இருந்தன. ஃபிக்ஹ் நூல்களில்  இது இப்னு உமர்(ரலி) அவர்களின் மத்ஹப், இது அப்பாஸ் அவர்களின் மத்ஹப் எனக் குறிப்பிடப்படுகின்றன. நபித் தோழர்களை தொடர்நது தாபிஈன்கள் காலத்திலும் பின் தபஉ தாபிஈன்கள் காலத்திலும் மத்ஹப்கள் தொடர்ந்தன.

மத்ஹப்கள் தோன்றக் காரணம் என்ன

குர்ஆனிலோ ஹதீஸிலோ ஒரு சட்டம் தெளிவாக பின்பற்றதக்க அளவு கூறப்பட்டு இருந்தால் அங்கே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. உதாரணமாக தொழுகை , நோன்பு ,ஜகாத் , ஹஜ் போன்றவைகளில் கடமையாக்கப்பட்ட சட்டங்களில் வேற்றுமை ஏற்படவில்லை. ஒரு சட்டம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக கூறப்படாமல் இரு வேரு கருத்துகள் ஏற்பட வாய்ப்பிருந்தால் கருத்து வேற்றுமை தோன்றுவதன் காரணமாக மத்ஹப்கள் உண்டாகிண்றன.
இதற்கு நாம் பல உதாரணங்கள் கூற முடியும் என்றாலும் இங்கே சுருக்கமாக ஒரு உதாரணத்தை மட்டும் கூறி முடிக்கிறோம். கணவணை இழந்த கைப்பெண் எத்தனை மாதம் இத்தா இருக்க வேண்டும் என்றால் நான்கு மாதம் பத்து நாட்கள் என்பதில் எந்த இமாம்களிடமும் கருத்து வேற்றுமை இல்லை. ஏனென்றால் கணவனை இழந்த கைப்பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் எத்தனை காலம்  இத்தா இருக்க வேண்டும் என்பதில் இமாம்களிடையே கருத்து வேற்றுமை இருக்கிறது. இமாம் அபூஹனிபா(ரஹ்) அவர்கள் மூன்று மாதவிடாய் காலங்கள் இருக்க வேண்டும் என்றும், இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் மாத விடாய்க்கு பின் வரும் மூன்று சுத்தமான காலத்தை கணக்கிட்டு இத்தா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த கருத்து வேற்றுமை ஏற்பட காரணம் குர்ஆனில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுடைய இத்தா காலத்தை ஸலாஸத்த குரூஇன் மூன்று குர்உ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குர்உ என்ற அரபி வார்த்தை மாதவிடாய் காலத்தையும், மாதவிடாய் முடிந்த பின்வரும் சுத்தமான  காலத்தையும் குறிப்பிடப்கூடியதாக இருக்கிறது. குர்ஆனில் தெளிவாக குறிப்பிடப்படாத காரணத்தால் இமாம்களிடம் கருத்து வேற்றுமை தோன்றியுள்ளது. இதே போன்று ஹதீஸ்களிலும் இரண்டு கருத்துகள் ஏற்படக்கூடிய வார்த்தைகள் இருப்பதால் இமாம்களிடையே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன

இஜ்திஹாத் என்றால் என்ன?

இஜ்திஹாத் என்ற அரபு வார்த்தைக்கு ஒன்றின் முடிவினை அறிய கடும் முயற்சி செய்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய ஷரீஅத்தில் இஸ்லாமிய சட்டம் இதில் என்னவாக இருக்கும் என  குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் செய்யப்படும் ஆயவுக்கு இஜ்திஹாத் எனப்படும்.

இஜ்திஹாத் யார் வேண்டுமாலும் செய்யலாமா?

இஜ்திஹாதின் நோக்கம் அல்லாஹ் ரசூலின் நோக்கத்தை சரிவர அறிந்து சட்டங்களை உருவாக்குவதுதான் எனவே அவ்விதம் சரியான முறையில் அறிவதற்கு  இஜ்திஹாத் செய்பவரிடம் கீழ்கண்ட தன்மைகள் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய ஷரீஅத்தின் மீது பரிபூரண நம்பிக்கை இருக்க வேண்டும். அதனை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் இருக்க வேண்டும்.
2.அரபி மொழி தெரிந்திருக்க வேண்டும். அதாவது அதனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் சொல்லப்படும் பொருள் நடைமுறையில் உபயோகப்படுத்தும் விதம் அதனுடைய இலக்கண, இலக்கிய சட்டங்கள் போன்றவைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏன் என்றால் குர்ஆனில் நபி வழியும், அரபி மொழியும் தான் இருக்கிறது.
3. குர்ஆன் ஹதீஸ் சம்பந்தமான பரிபூரணமாக அறிவு ஞானம் இருக்க வேண்டும், ஏன் என்றால் ஒரு பிரச்சனையில் குர்ஆனும், ஹதீஸூம் எந்த வகையில் அணுகி இருக்கின்றன என்பதை நுனுக்கமாக தெரிந்தால்தானே அதே போன்று வேறு பிரச்சனையில் சிந்தித்து முடிவு செய்ய இயலும்.
4.ஸஹாபா பெருமக்களின் இஜ்திஹாத்களையும் நடைமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள் தான் நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு பழகி பாடம் பயின்று, அவர்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்தவர்கள்.
5. நடைமுறை வாழ்க்கையையும் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஷரீஅத்  சட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தும் விதத்தில் அமைக்க இயலும்.
6 மிக முக்கியம் அல்லாஹ்வின் மீது அச்சமும், பேணுதலும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் நேர்மையான சிந்தனையும் மக்களின் நன்மதிப்பையும் பெற்று அவர்களை பின்பற்றும் நம்பிக்கையும் ஏற்படும்.

மௌலவி கனியூர் இஸ்மாயில் நாஜி நீடூரி பாஜில் மன்பயீ தேவ்பந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்