சனி, 6 அக்டோபர், 2012

முதியோர்களை மதித்து வாழுங்கள்! மிதித்து வாழாதீர்!

மனித உரிமைகளுக்கும்,உணர்வுகளுக்கும் உரித்தான மதிப்பையும் மரியாதையையும் நிறைவாக வழங்குவதில் இஸ்லாம் முதலிடம். பாதையில் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைகளை அப்புறப்படுத்துவது ஈமானின் கடைசி அங்கம், அண்டை வீட்டானிடம் ஒட்டி வாழு வெட்டி வாழாதே, அண்டை வீட்டான் பசியோடு இருக்க வயிறு நிரம்ப உண்ணுபவன் உண்மையான முஸ்லிம் அல்ல என்ற ஏராளமான நபிமொழிச் செய்திகள் நமக்கு சுட்டிக்காட்டுவது மனித உணர்வுகளும், உரிமைகளும் தொய்வில்லாமல் பேணப்பட வேண்டும் என்பதனையே.
கடந்த அக்டோபர்1 உலகம் முழுக்க முதியோர்கள் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மனிதர்களில் மூத்தவர்களான முதியோர்களின் நலன் குறித்தும், உணர்வுகள் குறித்தும் காரசாரமாக கருத்தரங்கம் நடைபெற்றன. 1கோடி 76இலட்சம் செலவில் முதியோர் மற்றும் சிறுவர் காப்பகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.ஹெல்ப் ஆ­­­­ஃப் ஏஜ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் முதியோர்களை அவமதிக்காதீர் என உரையாற்றினார் என்ற தகவல்களை நாம் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிவோம். உண்மையிலேயே இக்கருத்துக்களும், பேச்சோடு முடிந்து போகும் திட்டங்களும் முதியோர்களின் வருங்கால வாழ்க்கை நலனுக்கும், நிகழ்கால மனஉலைச்சல்களுக்கும் தீர்வாகுமா? என்றால் கண்டிப்பாகக் கிடையாது.
கட்டிடங்களை கட்டித்தருவதோ உதவித்தொகையை உயர்த்துவதோ அவர்களின் மனநிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுக்காது. மாறாக இஸ்லாம் சொல்லித்தருவது போல சமூகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு அங்கத்தினர்களும் (சிறார்கள்,இளைஞர்கள்,சமூகத்தினர்) பெரியோர்கள் இருப்பதை பூமிக்கு பாரமாய் கருதாமால் தங்களது வாழ்க்கயின் வழிகாட்டிகளாகவும், முன்னோடிகளாகவும் கருதி சரியான கண்ணியத்தை கொடுத்தால் மட்டுமே முதியோர்களின் நலமான வாழ்க்கைக்கு நல்ல காலம் பிறக்கும்.
நபிகள் பெருமான்(ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப்பற்றிக் கூறியது
حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَنْ جَدَّتِهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ لَمَّا وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي طُوًى قَالَ أَبُو قُحَافَةَ لِابْنَةٍ لَهُ مِنْ أَصْغَرِ وَلَدِهِ أَيْ بُنَيَّةُ اظْهَرِي بِي عَلَى أَبِي قَبِيسٍ قَالَتْ وَقَدْ كُفَّ بَصَرُهُ قَالَتْ فَأَشْرَفْتُ بِهِ عَلَيْهِ فَقَالَ يَا بُنَيَّةُ مَاذَا تَرَيْنَ قَالَتْ أَرَى سَوَادًا مُجْتَمِعًا قَالَ تِلْكَ الْخَيْلُ قَالَتْ وَأَرَى رَجُلًا يَسْعَى بَيْنَ ذَلِكَ السَّوَادِ مُقْبِلًا وَمُدْبِرًا قَالَ يَا بُنَيَّةُ ذَلِكَ الْوَازِعُ يَعْنِي الَّذِي يَأْمُرُ الْخَيْلَ وَيَتَقَدَّمُ إِلَيْهَا ثُمَّ قَالَتْ قَدْ وَاللَّهِ انْتَشَرَ السَّوَادُ فَقَالَ قَدْ وَاللَّهِ إِذَا دَفَعَتْ الْخَيْلُ فَأَسْرِعِي بِي إِلَى بَيْتِي فَانْحَطَّتْ بِهِ وَتَلَقَّاهُ الْخَيْلُ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى بَيْتِهِ وَفِي عُنُقِ الْجَارِيَةِ طَوْقٌ لَهَا مِنْ وَرِقٍ فَتَلَقَّاهُ الرَّجُلُ فَاقْتَلَعَهُ مِنْ عُنُقِهَا قَالَتْ فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَدَخَلَ الْمَسْجِدَ أَتَاهُ أَبُو بَكْرٍ بِأَبِيهِ يَعُودُهُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلَّا تَرَكْتَ الشَّيْخَ فِي بَيْتِهِ حَتَّى أَكُونَ أَنَا آتِيهِ فِيهِ قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ هُوَ أَحَقُّ أَنْ يَمْشِيَ إِلَيْكَ مِنْ أَنْ تَمْشِيَ أَنْتَ إِلَيْهِ قَالَ فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ ثُمَّ مَسَحَ صَدْرَهُ ثُمَّ قَالَ لَهُ أَسْلِمْ فَأَسْلَمَ وَدَخَلَ بِهِ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأْسُهُ كَأَنَّهُ ثَغَامَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا مِنْ شَعْرِهِ ثُمَّ قَامَ أَبُو بَكْرٍ فَأَخَذَ بِيَدِ أُخْتِهِ فَقَالَ أَنْشُدُ بِاللَّهِ وَبِالْإِسْلَامِ طَوْقَ أُخْتِي فَلَمْ يُجِبْهُ أَحَدٌ فَقَالَ يَا أُخَيَّةُ احْتَسِبِي طَوْقَكِ  رواه احمد
அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தை மக்கா வெற்றிக்குப்பின் இஸ்லாத்தை ஏற்க நபிகள் நாயகத்தை தேடி வந்த போது நபி(ஸல்) கூறிய வார்த்தை நாம் உச்சானிக்கொம்பில் இருந்தாலும் பெரியோர்களை மதித்து வாழ வேண்டியதின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றது.
வயதிலும் அந்தஸ்திலும் உயர்ந்த அபுபக்கர் உமர் அவர்களை வசைச்சொற்களால் வஞ்சித்த கயவன் கனவிலேயே அறுக்கப்பட்டது
عن محمّد بن عليّ السمان قال: "سمعت رضوان السمان قال: "كان لي جار في منزلي وسوقي، وكان يشتم أبا بكر وعمر - رضي الله عنهما - قال: فكثر الكلام بيني وبينه، فلما كان ذات ليلة شتمهما وأنا حاضر، حتى وقع بيني وبينه كلام، حتى تناولني وتناولته، فانصرفت إلى منزلي وأنا  مغموم حزين، ألوم نفسي، قال: فنمت، وتركت العشاء من الغم، فرأيت رسول الله صلى الله عليه وسلم في منامي في ليلتي، فقلت له: يا رسول الله، فلان جاري في منْزلي وفي سوقي، هو يعيب أصحابك، قال: "من أصحابي؟"، فقلت: أبا بكر وعمر، فقال رسول الله صلى الله عليه وسلم: "خذ هذه المدية فاذبحه بها". قال: فأخذته فأضجعته فذبحته، فرأيت كأن يدي أصابها من دمه، قال: فألقيت المدية وأوهيت بيدي إلى الأرض أمسحها، فانتبهت، وأنا أسمع الصراخ من نحو داره، قلت: انظروا ما هذا الصراخ؟، قالوا: فلان مات فجأة، فلما أصبحنا نظرت إليه فإذا خطّ في موضع الذبح"
عبد الله بن أحمد في زوائده على فضائل الصحابة 1/299،
வயது முதிர்ந்த سعد بن معاذ வந்த போது நபிகள் நாயகம் அவர்களது கூட்டத்தை سعد بن معاذ க்கு எழுந்து நின்று கண்ணியம் செய்யக் கூறியது
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثنا يُونُسُ بْنُ حَبِيبٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ فِي خُطُمِ بَنِي قُرَيْظَةَ، فَأَقْبَلَ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قُومُوا إِلَى سَيِّدِكُمْ
நபிகள் பெருமான்(ஸல்) அவர்கள் சிறுவர் انَس بْنِ مَالِك  அவர்களுக்கு செய்த உபதேசம்
حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ الْغُبَرِيُّ ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ الدَّوْرَقِيُّ ، قَالا : حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ ذُونٍ التَّغْلِبِيُّ ، قَالَ : كُنْتُ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ ، فَسَمِعْتُهُ يَقُولُ : خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَ حِجَجٍ ، فَقَالَ لِي : يَا أَنَسُ ، " وَقِّرِ الْكَبِيرَ ، وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقْنِي يَوْمَ الْقِيَامَةِ.
சிறுவராய் இருந்த இப்னு உமர்(ரலி) அவர்களின் அனுகுமுறை
حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِىُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِى الْخَلِيلِ الضُّبَعِىِّ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمًا لأَصْحَابِهِ « أَخْبِرُونِى عَنْ شَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُؤْمِنِ ». فَجَعَلَ الْقَوْمُ يَذْكُرُونَ شَجَرًا مِنْ شَجَرِ الْبَوَادِى. قَالَ ابْنُ عُمَرَ وَأُلْقِىَ فِى نَفْسِى أَوْ رُوعِىَ أَنَّهَا النَّخْلَةُ فَجَعَلْتُ أُرِيدُ أَنْ أَقُولَهَا فَإِذَا أَسْنَانُ الْقَوْمِ فَأَهَابُ أَنْ أَتَكَلَّمَ فَلَمَّا سَكَتُوا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هِىَ النَّخْلَةُ ». رواه المسلم

سَمُرة بنِ جُندب அவர்களின் அறிவார்ந்த அனுகுமுறை

وعن أَبي سعيد سَمُرة بنِ جُندب رضي الله عنه ، قَالَ : لقد كنت عَلَى عَهْدِ رَسُول الله صلى الله عليه وسلم غُلاماً ، فَكُنْتُ أحْفَظُ عَنْهُ ، فَمَا يَمْنَعُنِي مِنَ القَوْلِ إلاَّ أنَّ هاهُنَا رِجَالاً هُمْ أسَنُّ مِنِّي . مُتَّفَقٌ عَلَيهِ )) صفحة 182
سمرة بن جندب அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து நான் ஹதீஸ்களை மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்ல தடையாக இருந்த்தெல்லாம் அங்கு வயதில் மூத்தவர்கள் இருந்தது தான் என்று கூறினார்கள் என்றால் முதியவர்களுக்கு மதிப்பும் மரியாதையையும் எந்தளவிற்கு கொடுத்திருப்பார்கள் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. பெரியவர்களுக்கு முன் வாய்திறப்பதையே அவமரியாதை என்று எண்ணிய காலம் போய் முதியோர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பதையும், நக்கல் நய்யான்டி செய்வதையுமே நாகரிகம் என்று எண்ணுகின்ற திருத்தப்பட வேண்டிய சமுதாயத்தை நாம் பெற்றிருக்கின்றோம் என்று கூறினால் அது மிகையல்ல.சிறியவர்கள் முதியவர்களை மூத்தவர்களாகவும், முன்னோடிகளாகவும் மனதில் கொண்டு கண்ணியம் செய்தல் வேண்டும். இன்றைக்கு இருக்கும் பெரியோர்களை பெருசு என்று நக்கலாய் பேசும் சிறுசுகளும், இளசுகளும் (இளைஞர்களும்) சிறுவராய் இருந்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நாயகம்(ஸல்) ஆற்றிய போதனையை பாடமாய் ஏற்று செயல்பட வேண்டும். வயதில் சிறியவராய் இருந்த போதிலும் அறிவார்ந்த முறையில் முதியவர்களுடன் நடந்து கொண்ட இப்னு உமர்(ரலி) அவர்களின் வரலாற்றை நாம் முன்மாதிரியாய் எடுத்துக்கொள்ள வேண்டும். அகிலத்திற்கே நாளை ஷபாஅத் செய்யும் நமது நாயகம் மிஃராஜ் பயணத்தில் மூஸா(அலை) அவர்களுடைய வார்த்தைக்கு மரியாதைக் கொடுத்து சுமார் 9முறை சலைக்காமல் அல்லாஹ்விடம் சென்று தொழுகையை குறைத்து வந்ததர்கு, வயதான மூஸா(அலை) அவர்களின் பேச்சைத் தட்டக்கூடாது என்பதும் ஓர் காரணம். முதியோர் என்றாலே பழமைவாதிகள், சடங்கு சம்பிரதாயம் பார்ப்பவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என்று தட்டிக்கழிக்கினறோர் இஸ்லாம் எடுத்துரைக்கும் முதியோர் நலத்தை கருத்தில் கொண்டு இனியாவது முதியோர்களை மிதித்து வாழாமல் மதித்து வாழ கற்றுக்கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்