அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எதிர்வரும் ரபீவுல் ஆகிர் பிறை 22 (ஜனவரி 21) சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை வரை நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் அண்ணல் அஃ லா ஹஜ்ரத் நூற்றாண்டு நினைவு நிறைவுப் பெருவிழா நடைபெறவுள்ளது .
அண்ணாரின் நினைவலைகளை பதிவு செய்வதுடன் , மார்க்க சேவையாற்றி மறைந்த பல்வேறு மாமேதைகளின் மாண்புகளையும் , வரலாறுகளையும் பகிர்ந்து கொண்டு உலமாக்களுக்கும் , மாணவர்களுக்கும் எழுச்சியையும் , புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தப்படவுள்ளது .அரபி மதரஸாக்களின் அருமையையும் , பெருமையையும் பதிவு செய்வது முக்கிய நோக்கமாகும் .
இப்பெருவிழாவில் ஆலிம்கள் , மத்ரஸாக்களின் பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
இங்கனம்
முதல்வர் & நிர்வாகிகள்
JMH - நீடூர் - நெய்வாசல்