ஞாயிறு, 14 அக்டோபர், 2012
வியாழன், 11 அக்டோபர், 2012
பெற்றோர்களே! இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்!
உண்மையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இணையத்தில் அதிகளவாக வெளிவரும் REALITY
SEX SCANDAL வீடியோக்களில் இந்திய- இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான்
முதன்மை பெறுகின்றார்கள். இந்திய இலங்கைப் பகுதிகளில் தான்
பூங்காக்களிலும், பஸ்களிலும், ஏனைய விடுதிகளிலும் இடம் பெறும் உறவுகளைத்
திருட்டுத் தனமாகப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றிக் காசு பார்க்கும் வேலை
முனைப்புடன் இடம் பெற்று வருகின்றது.
நாம் எங்கே போகின்றோம்? ஆசிய நாட்டவர்களில் இலங்கை- இந்திய
மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தினைச் சமயோசிதமாகப்
பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதனை பஸ்களிலும், கடைகளிலும்,
ஓட்டல்களிலும், பெண்கள் டாய்லெட் இருக்கப் போகும் இடங்களிலும் திருட்டுத்
தனமாகக் கமெராவினைச் செருகி அதன் மூலம் பிறரின் அந்தரங்கங்களை அறிந்து படம்
பிடித்து இணையத்தில் ஏற்றித் தமது வக்கிரத்தினைத் தீர்த்துக்
கொள்கின்றார்கள் சில குறுகிய மனப் பாங்கு கொண்டோர்.
இன்றைய கால கட்டத்தில் சமூகத்தில் நிகழும் வேண்டத்தகாத சிறு
வயதுக் கருத்தரிப்பிற்கும், பல துர்நடத்தைகளுக்கும் பேஸ்புக், மற்றும் இதர
சமூக சாட்டிங் வலைத் தளங்களே காரணமாக அமைந்து கொள்கின்றன. உதாரணமாக இள
வயதினர் அதிகளவாகத் தம் நேரத்தினை இச் சமூக வலைத் தளங்களில் செலவிடுவதன்
மூலம் தம் பல காமுகர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி அவர்களுடன்
நெருக்கமாகி, பின்னர் நேரடிச் சந்திப்புக்களில் ஈடுபட்டுத் தமது
வாழ்க்கையினைக் குட்டிச் சுவராக்குகிறார்கள்.
பேஸ்புக்கில் தம் படங்களைப் போட்டு, அதற்கு ஆடவர்கள்
கமெண்ட் போட வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக, படு தூக்கல் கவர்ச்சியாக தம்
அங்கங்கள் வெளியே துருத்திக் கொண்டு நிற்கும் வண்ணம் படங்களை எடுத்துப்
பகிருவதிலும் இன்றைய இளம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் முனைப்புடன்
செயற்படுகின்றார்கள். ஆண்களில் சிலர் தாம் காதலித்த பெண்ணுடன் மனக் கசப்பு
உருவாகியதும் அப்பெண்ணை விட்டுப் பிரியும் சமயத்தில்; பேஸ்புக்கில் அவளது
பெயரிலே ஒரு ஆபாசமான அக்கவுண்டினைத் திறந்து அதனூடாக, தாம் நெருக்கமாக
இருந்த தருணங்களில் எடுத்த படங்களைப் போட்டுத் தம் வக்கிர மனப்
பான்மையினைத் தீர்த்துக் கொள்கின்றார்கள்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்திலே
பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, ஆண் பெண் உறவு தொடர்பான விளக்கங்கள்,
பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஏற்படும் கருத்தரிப்பு தொடர்பான ஆலோசனைகளைத்
தம் பிள்ளைகளுக்கு கூற வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையில்
திணிக்கப்பட்டிருக்கின்றது. ஆணுறை பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களும்
குழந்தைகள் பருவய வயதினை(டீன் ஏஜ்) எட்டுகின்ற பொழுதுகளில் தெளிவாக
எடுத்துரைக்கப்பட்டால் தான் எம் சமூகத்தில் நிகழும் இள வயதுக்
கர்ப்பங்களைத் தடுத்து நிறுத்த முடியும்!
பெற்றோர்களே! சமூகம் இணைய வழியில் துஷ் பிரயோகமாகுவதையா
நீங்கள் விரும்புகின்றீர்கள்? உங்கள் பிள்ளைகள் பருவ வயதினை எட்டுகின்ற
சமயத்தில், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை வளமாக்க
விரும்பும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கும் பாலியல் பற்றிய
தெளிவினை எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடு உங்கள் கண் முன்னே இருப்பதனை
நீங்கள் மறந்து விடக் கூடாது.
இணைய வழியில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுதுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் ஏதுவான சில தகவல்கள்:
*உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப்
பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக்
கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.
*கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.
*உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை
நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன்
செலவளிக்க விட வேண்டாம்.
*பாலியல் தளங்களை, சாட்டிங் தளங்களை உங்கள் பிள்ளைகள்
வீடுகளில் அக்செஸ் பண்ண முடியாதவாறு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து
வைத்திருக்கலாம்.
இப் பதிவின் நோக்கம் சிறு பிள்ளைகள் மனதில் ஏற்படும் பாலியல் தொடர்பான துஷ்பிரயோகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதேயாகும்.
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
மாமனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
[ இதோ மேலிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். இந்த மக்கள் வெள்ளம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லை ஏற்றுத் தானே, கட்டுப்பட்டுதானே இங்கு கூடியிருக்கிறது என்பதை உலகம் சிந்திக்கட்டும்.]
மாமனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
[ வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத,
அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத,
அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத,
தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத,
மாற்றுமதத்தவரை மதித்த,
ஹஜ் பயணிகள் கவனிக்கவும்
இந்த ஆண்டின் ஹஜ்
தொடங்கிவிட்டது.
முதல் விமானம் பாகிஸ்தனிலிருந்து 329 பயணிகளுடன் மன்னர்
அப்துல் அஜீஸ் சர்வதேச விமான் நிலைய்த்தில் புதன்கிழமை தரையிரங்கியது.
இந்த ஆண்டு 65
ஆஆயிரம் இந்திய ஹாஜிகளுக்கு அஜீஜிய்யாவில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஹஜ்
கமிட்டி முலம் பயணம் செய்யவுள்ள 125000 ஹாஜிகளுக்காக 479 கட்டிடங்க தயார் படுட்தப்பட்டுள்ளதாகவும் மற்ற அனைத்து ஏற்பாடுகௌம் திருப்தி அளிக்கும்
வித்த்தில் உள்ளதாகவ்ம் இந்திய ஹஜ் கமிடியின் தலைவி முஹ்ஸீனா கித்வாய் அறிவித்துள்ளார்
சாமாண்ய ஹாஜிகள்
தங்குவதற்கான புதிய பகுதியா உருவாக்கப் பட்டிருக்கிற அஜீஜியா விலிருந்து ஹாஜிகளை அழைத்துச் செல்வதற்காக அதிகப்படியான பஸ்கள்
இயக்கப்க்கப்பட வுள்ளத்தகவும் 70 நிற்த்தங்கள்
அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக்வும் அதிகாரிகள் தெரிவித்தனர்ர்.
.இந்த ஆண்டு ஹாஜிகளுக்கு
பெட்சீட்டுகள் தலையணை உரைகள் பக்கெட்டுகள் மக்குகள் பாத்ரூம் கழுவும் பிரஸ்க்ள் வழங்க
புதிய ஏஜென்ஸியை நியமித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
அதே போல இந்த ஆண்டு
பயணம் புறப்படுவதற்கு முன்னதாக ஹாஜிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப் பட வுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
இறையடியார்கள் சுமர் 40 லட்சம் பேர் ஓரிட்த்தில் ஒரே மாதிரி ஆடையில் ஒரே கோஷத்தோடு ஒரே உணர்வோடு ஒன்று கூடும் பக்திப் பெருவிழா ஹஜ்.
உலகின் மிகப்பெரிய மக்கள் திரட்சி என்று ஊடகங்கள் குறிப்பிடுகிற மக்கள் கூட்ட்த்தில் இணைந்து கொள்ள முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் எங்கும் இருந்து கூட்டம் கூட்டமாக ஹாஜிகள் கிளம்பி வருகின்றனர்.
அல்லாஹ்வின் கிருபையால இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்ட்து.
ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.
عن أَبي هُرَيْرَةَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي
وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ - النسائي
அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.
ஹாஜீகளை
வழியனுப்புவோம். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்
استودع الله دينك
وامانتك وآخر عملك وزودك الله التقوي ويسرلك الخير حيث كنت
அவர்களிடம் நமக்காக துஆ செய்யுமாறு கேட்போம்.
பெருமானார் (ஸல்) உம்ரா செய்ய அனுமதி கேட்ட உமர் ரலியிடம் துஆ செய்ய கோரினார்கள்.
ஹஜ்ஜுக்கு புற்ப்படுகிறவர் கவனிக்க் வேண்டிய அம்சம்.
நிய்யத் முக்கியம்
எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் எனற எண்ணத்தி
சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்
.
قال رسول الله صلى الله عليه وسلم:
يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة وأوسطهم للتجارة وقراؤهم للرياء
والسمعة وفقراؤهم للمسألة
பெரும் பணம் செலவழித்து உடல் சிரமங்களை தாங்கி நிறைவேற்றும் ஒரு வணக்கம் அற்ப
நோக்கங்களல் பயனற்றதாகி விடக் கூடாது.
நான் அல்லாஹ்விற்காக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.
ஹஜ்ஜுக்காக தயாராகிக்
கொண்டிருப்போர் இரவு நேரத்தில் தனிமையில் அல்லது தஹஜ்ஜது தொழுது விட்டு உட்கார்ந்து
கொண்டு “ நான்
ஏன் ஹஜ்ஜுக்குப் போகிறேன்”எனற் கேள்வியை
தமக்குள் கேட்டுக் கொள்ள் வேண்டும்
ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.
1.
மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்
2.
நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல்
3. நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.
ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.
ஹாஜி கவனம் செலுத்த வேண்டிய இரண்டாவது விசயம் தவ்பா
ஹாஜி அன்று பிறந்த பாலகனாகவே நீடிக்க வேண்டுமெனில் எனில் முன்னதாக
ஒரு முடிவுக்கு வர இது வரை செய்து வந்த தவறுகளை இனிமேல் செய்ய மாட்டேன். என்று உறுதியேறக
வேண்டும்.
அதனால் ஹஜ் பயணத்திற்கு முந்தைய தவ்பா என்பது முக்கியமானது.
தவ்பா இப்படி அமைவ்வது பொருத்தமானது. .
اللهم إني اتوب إليك لا ارجع إليها أبدا
اللهم مغفرتك اوسع من ذنبي ورحمتك ارجي عندي من عملي
·
பெற்றோர்களிடம் தெரிவிப்பதும் அவர்களை கவனிக்க தக்க ஆட்க்ளை
ஏற்படுத்துவதும் முக்கியம்.
கடன் உள்ளிட்ட மற்ற பொறுப்புக்களை
மற்றவர்களிடம் தெரிவித்து ஒப்படைத்து வேண்டும்.
யூத கிருத்துவ உலகின் வக்கிர புத்தி
செப்டம்பர் 11 நிகழ்வின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முஸ்லிம் விரோத கருத்துக்களும் இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு
அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்பவப் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து
அதன் 14
நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான். இவன் ஒரு யூதன்.
மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது. எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது. இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) பெண் பித்தராக - கோடூர மனம் கொண்டவராக - பெண்களிடமிருந்து செருப்பால் அடிவாங்குப்வராக - முஸ்லிம்களுக்கு மக்காவின் காபிர்கள் இழைத்த கொடுமைகளை - முஹம்மது (ஸல்) அவர்கள் அவரை பிடிக்காதவர்களுக்கு வழங்கியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவல்ப்படுத்துகிறது.
மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது. எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது. இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) பெண் பித்தராக - கோடூர மனம் கொண்டவராக - பெண்களிடமிருந்து செருப்பால் அடிவாங்குப்வராக - முஸ்லிம்களுக்கு மக்காவின் காபிர்கள் இழைத்த கொடுமைகளை - முஹம்மது (ஸல்) அவர்கள் அவரை பிடிக்காதவர்களுக்கு வழங்கியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவல்ப்படுத்துகிறது.
முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை
கடுமையாக வெளிப்படுத்தியும் கூட யூ டூப் இப்படத்தை அகற்ற வில்லை. அது தொடர்ந்து
முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் கோபத்தையும் பெருகச் செய்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து
மத உணர்வுகளை புண்படுத்தி வருகிற பாதிரியார்
டெர்ரி ஜோன்ஸ் உட்பட எவரையும் கண்டிப்பதோ கைது செய்வதோ இல்லை. மாறாக கண்டு
கொள்ளாமல் இருந்து விடுகிறது.
உலகம் முழுவதிலிருந்து ம்
இதற்கு எதிரான கணடனக்குரல்கள் எழுப்ப பப்பட்டு வருகின்றன.
எகிப்தில் நடை பெற்ற கண்ட ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக
மாறியது. எகிப்து நாட்டினர் அயிரக்கணக்கானோர் அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோஷங்களை எழுப்பினர். ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய
போராட்டத்தை கண்டித்துள்ளார்.
போராட்டம் லிபியாவில் பரவியது. அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை
முற்றுகையிட்ட மக்கள் கோபத்தில் தாக்கியதில் தூதரக ஊழியர் ஒருவர் பலியானார். அங்கிருந்து
தப்பித்து பாதுகாப்பான இட்த்துக்கு சென்று கொண்டிருந்து லிபியாவிற்கான அமெரிக்க
தூதர் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் தூதரக ஊழியர்கள் மூவரும்
கொல்லப்பட்டுள்ளனர். இறந்து போன தனது நாட்டவரின் உடல்களை மீட்டு வருவதற்காக
உடனடியாக விமானத்தை அனுப்பிய அமெரிக்க இதுவரை இத்தனைக்கும் காரணமாக இருந்த பத்தை
பற்றி எதுவும் கூறவில்லை.
இந்தப் படம் இன்னஸெண்ட்
முஸ்லிம்ஸ் என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது.
பெருமானாரின் தோற்றத்தில்
ஒருவனை நடிக்க வைத்திருப்பதோடு பெருமானாரை பெண் பித்தராகவும் சித்தரிக்கிறது.
கெட்ட வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் அறிவுக்குப்
பொருத்தமில்லாமல் வெறுப்பை மட்டுமே கொப்பளிக்கும் நோக்கில் இந்தப் படம்
முட்டாள்தனமாக எடுக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம்கள் முஹம்மது நபி
(ஸல்) அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிப்பவர்கள். அவரது புகழ் மீது தூசு
படிவதை கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். கேரளாவில் ஒரு வன் பெருமானாரை
கேலிச்சித்திரம் வரைந்த்தற்காக அவனது கை வெட்டப்படது. இப்படித்தான நடக்கும்.
இதை எல்லாம் தெரிந்து கொண்டே
வேண்டு மென்றே முஸ்லிம்களை ஆத்திரப்படுத்துகிற நோக்கில் யூதச் சாத்தான் இந்தப் படத்தை
வெளியிட்டுள்ளான். கிருத்துவ விஷமிகள் அதற்கு தூபம் போடுகின்றனர்.
முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பையும்
வேதனையையும் முறையாக உலகிறகு தெரியப்படுத்த வேண்டும். பெருமானாரின் வரலாற்றின்
மீது சேறு வீசுகிற எந்த முயற்சியும் வெற்றி பெற்றதில்லை. அதனால் முஸ்லிம்கள்
தங்களது எதிர்ப்பில் எச்சரிக்கையாக – தங்களுக்கே அது பாதகமாக தேவையற்ற உயிர்
இழப்புக்களையும் பொருளாதார சேதங்களையும் உண்டு பண்ணி விடாமல் – கவனமாக நடந்து
கொள்ள வேண்டும்.
இந்த ப்படம் உடனடியாக தடை செய்யப்ப்பட
வேண்டும்.இந்தப் பட்த்தை வெளியிட்டவனுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.. இனி
இது போன்ற அற்பத்தனமான வேலைகளில் யாரும் ஈடுபடாத வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும். இந்த பட்த்தை வெளியிட்ட யூடுப் நிறுவனத்திற்கு கடும் கண்டனம்
தெரிவிக்கப் பட வேண்டும்.
Jones, the Christian
pastor in Florida, said that on Tuesday's anniversary of the Sept. 11, 2001,
attacks on the World Trade Center and the Pentagon, he had released a video
promoting a film that portrayed the Prophet in a "satirical" manner.
Many Muslims consider any depiction of the Prophet offensive.
US media, including
The Wall Street Journal, reported that the film at issue, entitled
"Innocence of Muslims," was produced by an Israeli-American real
estate developer, but had been promoted by Jones.
In Cairo, among about
2,000 protesters gathered in the Egyptian capital was Ismail Mahmoud, who, like
others, did not name the film that angered him, but called on Mursi, Egypt's
first civilian president, to take action.
"This movie must
be banned immediately and an apology should be made," said the 19-year-old
Mahmoud, a member of the "ultras" soccer supporters who played a big
role in the uprising that brought down Hosni Mubarak last year.
செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல்
விவகாரத்தில் அமெரிக்க மக்களுக்கு கவலை இருக்கும் என்றால் அது நியாயமானது.
அந்தக்கவலைக்கு மருந்து இப்படு ஒரு தாக்குதல் நடை பெறுகிற அளவிற்கு தங்களது
நாடு எப்படி நடந்து கொள்கிறது - உலகம் முழுவதிலும் - என்று அவர்கள்
யோசிக்கட்டும்.
ஹிரோஷிமாவில் நாகாசாகியில்ய்ம் குவாண்டமோ
பேயிலும் இப்போது இராக் இராண் ஆபகானிஸ்தான் பாகிஸ்தான் அமெரிக்கா எப்படி
நடந்து கொள்கிறது என்பதை அமெரிக்கா ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்த்தால்
இந்த உலகில் தங்களை விட பெரிய அயோக்கியர்கள் கொலை காரர்ர்கள் திருட்டுப்
பேர்வழிகள் தீய சக்திகள் தீவிரவாதிகள் வன்முறையாளர்கள் வேறு யாரும் இல்லை
என்பதை உணர்வார்கள்;.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கல...
-
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ...
-
தேவையானவற்றை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து view image என்பதை செலக்ட் செய்து zoom செய்து பார்க்கவும்.