வெள்ளி, 30 மார்ச், 2018

ஜல்ஸா - 2018


பிஸ்மிஹி தஆலா
‎ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் ‎அளப்பெரும் அருளால் ‎இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 29/04/2018 அன்று ‎நமது ஜாமிஆ ‎மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 72 ஆம் ஆண்டு ‎பட்டமளிப்பு விழா ‎நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 57 பாஜில் மிஸ்பாஹிகளும் ‎‎9 ஆலிம் ‎மௌலவி மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள். இந்த நன்நிகழ்வில் ‎மதுரை ஒத்தக்கடை நாபிஃவுல் உலூம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மற்றும் ‎நிறுவனருமான மௌலானா மௌலவி ‎ அல்ஹாஜ் M.முஹம்மது காசிம் ‎பாகவி MA, LLB ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை ‎நிகழ்த்த ‎இருக்கிறார்கள். மேலும் மேலப்பாளையம் உஸ்மானியா ‎அரபிக்கல்லூரியின் முதல்வர் SS. ஹைதர் அலி ஆலிம் ‎மிஸ்பாஹி ஹஜ்ரத் ‎அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். ‎
‎ அதற்கு முந்தைய தினம் ஏப்ரல் 28/04/2018 அன்று ‎இஷாவிற்குப் பின் ‎நடக்கும் பெண்கள் பயானில் நமது ஜாமிஆவின் முன்னாள் துணை ‎முதல்வரும், தற்போது கரம்பக்குடி பத்ரிய்யா அரபிக்கல்லூரியின் ‎முதல்வருமான மௌலவி K.அப்துர்ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் ‎அவர்கள் சிறப்புரையாற்ற ‎இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் ‎அனைவரும் கலந்து பயனடையுமாறு ‎கேட்டுக் கொள்கிறோம். ‎
‎ அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், ‎உலமா ‎பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் ‎தகவலை எத்தி ‎வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் ‎பிரார்த்தியுங்கள்.‎

 இப்படிக்கு,‎

                   ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா
‎                   நீடூர் – நெய்வாசல்.நாகை –DT.






‎                                                                                                    ‎‎                             

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்